நாக்பூர்:தமிழ் உட்பட எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.